×

அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் லாக்டவுன் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ என்ற படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். இங்கு ‘கொடி’ என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அவர், பிறகு அதர்வா முரளி ஜோடியாக ‘தள்ளிப் போகாதே’, ஜெயம் ரவி ஜோடியாக ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்தார். தவிர, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் – காளமாடன்’ என்ற படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரன், லைகா புரொடக்‌ஷன்ஸ் ஏ.சுபாஷ்கரன் தயாரிக்கும் ‘லாக்டவுன்’ என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ஜீவா எழுதி இயக்குகிறார். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன், சித்தார்த் விபின் இணைந்து இசை அமைக்கின்றனர். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படமாக இது உருவாக்கப்படுகிறது.

The post அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் லாக்டவுன் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Anupama Parameswaran ,Chennai ,Dhanush ,Atharva Murali ,Jayam ,Lockdown ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அனுபமா பரமேஸ்வரன் ஃபிட்னெஸ்!